Sunday, 22 December 2013

பனி வெடிப்புக்கு டிப்ஸ் வேண்டுமா?

                   பனி வெடிப்பு தைலம் 

தேங்காய் எண்ணெயில்  அருகம்புல்,வசம்பு ,விரலிமஞ்சள் இவைகளை 
போட்டு மிதமாக சூடுசெய்து  குளிப்பதற்கு முன் இந்த தைலத்தை ப்பூசி   அரைமணி நேரம்  கழித்து வெந்நீரில் குளித்துவந்தால் மேனிபளபளக்கும் 

                 பாதவெடிப்பு நீங்க சூரணம் 

பூந்திக்கொட்டை ,உப்பு,எலுமிச்சை ,படிகாரம்  இவைகளின் கலவையை சுமார் 10கிராம் அளவு எடுத்து 2லிட்டர் வெந்நீரில் கலந்து  அரைமணி நேரம் கால்களை  ஊறவைக்க வேண்டும்.

                  உடல்,முடி -முழுமையாகப்  பராமரித்தல்

 கறிவேப்பிலை,மருதாணி,கரிசலாங்கண்ணி,துளசி,வேம்பு,குப்பைமேனி,நெல்லிக்காய் இவைகளை பசைபோல் அரைத்து சிரசிலிருந்து பாதம்வரை தேய்த்து அரைமணிநேரம் கழித்து இளம் வெந்நீரில் குளிக்கவேண்டும்.

                 முகம் அழகு பெறுவதற்கு டிப்ஸ் 

உளுந்து,பாசிபைறு,கடுக்காய்,மஞ்சள் இவைகளை நன்கு அரைத்து சிறிது நீரில் கலந்து முகம்,கை,கால் இவற்றில் பூசி 30நிமிடம் கழித்து இளம்சூடான வெந்நீரில் கழுவ வேண்டும்.

                 முகப்பருக்கள் நீங்க டிப்ஸ்

.சோ ற்றுக்கற்றாலை,வேப்பிலை ,எலுமிச்சை சாறு ,ஆலிவ் ஆயிலில் கலந்து முகப்பரு உள்ள இடங்களில் தடவ வேண்டும்.முகப்பவுடரை தவிர்க்க வேண்டும். 

Thursday, 21 November 2013

ஹிஸ்டீரியாவை குணப்படுத்துவது எப்படி?

சிறு  நோய்களை சில வினாடி அல்லது சிலமணிநேரத்திற்குள் குணப்படுத்திவிடலாம்.ஆனால் இதயநோய் ,வாதநோய்,நரம்புத்தளர்ச்சி,ஹிஸ்டீரியா,மற தி ,மயக்கம்  போன்ற நோய்களை குணமாக்க   ஒருநாள்,இரண்டுநாள் அல்ல   பலநாட்கள் பாடுபடவேண்டும்.
    ஹிஸ்தீரியா  போன்ற  நோயுடையவர்களிடம் அவர்களுக்கு  எப்போதிலிருந்து அந்நோய் இருந்து வருகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும்.பெரும்பாலும் திருமணமாகி சிலகாலம்  கணவனுடன்  மகிழ்ச்சியாக இருந்து கணவனை  இழந்தவர்களுக்கே   இந்தநோய் வரும்.ஆனால் மிதமிஞ்சிய உணர்ச்சிவயப்பட்டவர்களுக்கும் ;கணவனால் திருப்திபடுத்தப்படாதவர்களுக்கும்  ஹிஸ்டீரியா நோய்வரும்.
           இந்நோயை   குணப்படுத்த நன்கு பேசி உண்மையை வெளிக்கொண்டுவரவேண்டும்.அல்லது  நெருங்கிய உறவினர்,நண்பர்களிடம்
கேட்டு உண்மையை தெரிந்துக்கொண்டு  சிகிச்சை அளித்தால் நோய்விரைவில் குணமாகும்.
    ஆண்மைக்குறைபாடு  உள்ள ஆண்களால்   மனைவியை திருப்திப்படுத்த முடியாத  ஆண்களால் பெண்களுக்கு  வரும்நோய் ஹிஸ்டீரியா ஆகும்.
ஆகவே ஆண்கள் தங்கள் இயலாமையை  புரிந்துக்கொண்டு மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால்  மனைவியை இல்லறசுகத்தில் மகிழ்ச்சிப்படுத்தலாம்  .     ஹிஸ்டீரியா  நோயையும் ஒழிக்கலாம்.
        மருத்துவரின் ஆலோசனையுடன் மூலிகை மருந்துகளை சாப்பிட்டு வந்தால் எந்தவித பக்கவிளைவும்   இன்றி   தாம்பத்திய வாழ்க்கையை இனிதே நடத்தலாம்.
                 மகிழ்ச்சியாக   வாழ்வோம்!
                 நலமுடன்         வாழ்வோம்!
         
மருத்துவர்:ஏ .கே .லோகநாதன்.
  9865655324  

Wednesday, 20 November 2013

அஞ்சரை பெட்டி -கையில் மருந்து

மலசிக்கல்  நீங்க:1.ஒரு வயதுக்குள் உள்ள குழந்தைக்கு  மலச்சிக்கல் இருந்தால்  மிளகு 8;சீரகம் 5கிராம் இரண்டையும் அம்மியில்  மைபோல்  அரைத்து வெந்நீரில் கலந்து  வடிகட்டி ஒரு சங்கு புகட்டவும் .சீரணசக்தி  ஏற்பட்டு  மலம் வெளியேறும்.வாந்தி,வயிற்றுவலி  சரியாகும்.
குழந்தைகளுக்கு சிறுநீர் சூடாக இருந்தால் 
2.குழந்தையின் தலையுச்சியில் விளக்கெண்ணையை  தடவிவர  சூடுகுறையும் .சிறுநீர் இதமாக வெளியேறும்.
3.குழந்தை சிறுநீர் கழிக்காமலிருந்தால்வெள்ளரிவிதையை தோல் நீக்கி இளநீர் விட்டு  மைபோல்  அரைத்து தொப்புளை சுற்றி பற்று போடவும்.10நிமிடத்தில் சிறுநீர் வெளியேறும்.இது உத்தமம்.
4.இரத்தத்துடன்  சீதபேதி வெளியேறினால் :
இரவு  எலுமிச்சை சாதம் செய்து வைத்து காலையில் தொடர்ந்து  3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும்.
மாதவிடாய் காலங்களில் ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால் .......
5.பிஞ்சு வாழைக்காய்  எடுத்து தோல் சீவி காலையில் வெறும் வயிற்றில் 2 நாட்கள் சாப்பிடவும்.சர்க்கரை இல்லாத பால் அருந்தவும்.அதிக ரத்தப்போக்கு உடனடியாக  நிற்கும்.புளி ,பச்சைமிளகாய்  சாப்பிடக்கூடாது.
தலையில்  பேன் ,பொடுகு தொல்லைஒழிய :
6.சீத்தாபழ   இலையை அரைத்து ஒரு மணி நேரம்  தலையில் தேய்த்து ஊறவைத்து  பிறகு சீகக்காய் தேய்த்து  குளிக்கவேண்டும்.வாரமொரு  முறை தேய்த்து வந்தால் பேன் ,பொடுகு வரவேவராது.
.

Tuesday, 19 November 2013

ரகசியம் -அதிசியம்

1.கல்தாமரை  ரகசியம்  ஆனால் அதிசயம் :...20வயதுக்கு மேல் ஆகியும் பூப்படையாத பெண்களுக்கு அதிசிய  கொல்லிமலை மூலிகை  இரண்டு மாத  சிகிச்சையில்  பூப்படைந்து   விடுவார்கள்,இது  உண்மை.
2.அம்மை தழும்பு மறைய 
    கருவேப்பிலை  ஒரு பிடி,கசகசா ஒரு ஸ்பூன் , கஸ்த்தூரி மஞ்சள் ஒரு துண்டு  மூன்றையும்  நன்றாக மைபோல்  அரைத்து முகத்தில் பூசி காயவிட்டு மறுநாள் குளிக்கவும். அம்மை தழும்பு மறைந்து விடும்.
3.அல்சர் குணமாக  அம்மன் பச்சரிசி இலையை  துவரம் பருப்புடன் சேர்த்து சாம்பார் செய்து சாதத்துடன்..பகல் .வேளை மட்டும் 7நாட்கள்  சாப்பிட நலமாகும்.
4.உடல் வாதம்  மற்றும்  வலி குறைய 
   வாதநாராயணன் கொழுந்து ,விழதி இலை ,பூண்டு,மிளகு ,சீரகம்,மிளகாய்வற்றல்  போன்றவற்றை விளக்கெண்ணெயில்  தாளித்து  ரசம் செய்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் வாதத்தினால் துன்பப்படுபவர் குணமடைவர்.
5. ஆண்மை குறை போக்கும் 
    ஆவாரம் பிசின்  தினம் 5குண்டுமணி  அளவு பவுடர் செய்து  பசும்பாலில் கலந்து ஒரு மண்டலம் குடிக்கவும்,குறைநீங்கி ஆண்மை பெருகும்.
6.காமாலை குணமாக 
   மூக்கிரட்டைவேர்  ஒருபிடி,அருகம்புல் ஒருபிடி ,கீழா நெல்லி ஒருபிடி,மிளகு 10[மட்டும்]  இடித்து அரை லிட்டர்  ஊற்றி  கால் லிட்டர் அளவு ஆகும் வரை சுண்டக்காய்ச்சி தினமும்  காலை,மாலை 10மி.லி. குடித்து வந்தால் நீர்க்கட்டு,மகோதரம்,காமாலை ,நீரேற்றம் குணமாகும்.

Tuesday, 12 November 2013

நித்யக்கல்யாணி யின் மகிமை

ஆண்டுதோறும் பூத்துக் குழுங்கும் நித்தியக்கல்யாணி என்றழைக்கப்படும் இந்த பூவிற்கு மற்றொரு பெயரும் உண்டு."சுடுகாட்டுப்பூ 
என்பதாகும்.  இந்தப் பூவின் இலை ,பூ,பட்டை அனைத்தும் மருத்துவகுணமுடையது.
        
இன்று அதிகமாகக் காணப்படும் நோய்களில் ஒன்று நீரிழிவு என்று சொல்லப்படும் "சர்க்கரைநோய்". இன்று தீர்க்கமுடியாத நோய்களில் இதுவும் ஒன்று என்று ஆங்கில மருத்துவர்கள் கூறுகின்றனர். சர்க்கரைநோய் ஒரு மனிதனுக்கு வந்துவிட்டால் சாகும்வரை மாத்திரை சாப்பிடவேண்டுமென்று  கூறுகின்றார்கள்.
     

 நீரிழிவுநோய் ஒரு "சைலன்ட்கில்லர்"தொடர்ந்து 10 ஆண்டுகளுக்குமேல்  மாத்திரை சாப்பிடுபவர்களின் சிறுநீரகம் முதலில் பாதிக்கப்படும்.

  •    கண்பார்வை குறைபாடு ஏற்படும் 
  • சிறுநீரகம் செயலிழந்து "டையலிசிஸ்"ல் கொண்டுப்போய்விடும்.
  • சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு எப்பொழுதுமே திடீரென்று "சைலண்ட் ஹார்ட்அட்டாக் "தான் எற்படும் .
  • இதற்கு என்ன தீர்வு?
        நித்யக்கல்யாணி இலை,பூ,பட்டை இவற்றின் சூரணம் காலை;மாலை தொடர்ந்து சாப்பிடும் பொழுது முற்றிலுமாக நீரிழிவு நோயை குணப்படுத்தலாம்.
        அவ்வளவு மருத்துவ குணம் கொண்ட

நித்யக்கல்யாநியை ...மருத்துவரின் ஆலோசனையுடன் சாப்பிட்டு நீரிழிவு நோயை அறவே ஒழியுங்கள்.
                  வாழ்க    வளமுடன் !
மருத்துவர்:ஏ .கே.லோகநாதன்.
                        9865655324

Saturday, 9 November 2013

எருக்கன் இலையின் மகத்துவம்

"உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச்  செயல் "
   புனித ஸ்தலங்களில் காணப்படும் எருக்கன் செடியின் இலைகள் நல்ல மருத்துவ குணமுடையது.இந்த செடியின் நுனி முதல் வேர்வரை கிள்ளினால் பால்வரும்.இந்தபால்விசக்கடி ஏற்பட்ட இடத்தின் மீது தடவலாம்.ஆணி,முள் குத்திய இடத்தின் மீதும் தடவலாம்.
      பழுத்த எருக்கன் இலையை கொண்டு காய்ச்சப்படும் எண்ணெய் காதில் சீல் ஒழுகுவதை நிறுத்தும் நல்ல மருந்தாகும். 
  • காது இரைச்சல்,காதுகுடைச்சல்,வெளிச்சி என்று கூறப்படும் சிறுகட்டி

    போன்றவைகளுக்கு பயனைத்தரும்..
  • காதில் ஏற்படும் தொந்தரவு நமக்கு "சிறு நீரகரத்தில் "  பின்பு வரும் நோய்களுக்கு ஒரு எச்சரிக்கை ஆகும் .
  • யானை வரும் பின்னே -மணி ஓசை வரும் முன்னே"என்பதை அறிந்து கொண்டு காலத்தேஉரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளவேண்டும்.
  • மருத்துவர் :ஏ .கே .லோகநாதன் 
  • 9865655324

ரோஜா பூவின் மகத்துவம் !



'அனைவராலும் விரும்ப படும் மலர்களில் ஒன்றான ரோஜாபூ அழகும் மனமும் சேர்ந்தது மட்டுமல்ல , மருத்துவ குணம் நிறைந்ததும் கூட என்றால் அது மிகையில்லை.'

ரோஜா பூவின் மருத்துவ குணங்கள் :

1 மலசிக்கலுக்கு அறிய மருந்தாக ரோஜா இதழின் சாறு மற்றும் கஷாயம் பயன்படுகிறது, மேலும் வயிறு சம்பந்த பட்ட சில பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை தரும் அருமருந்து , முறைப்படி மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ரோஜா இதழின் சாறு மற்றும் கஷாயத்தை பயன்படுத்தினால், வயிறு சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும், நாம் உண்ணும் உணவின் சக்தியை உடலுக்கு முழுவதும் பரிபூரணமாக கிடைக்க செய்யும் தன்மை கொண்டது இந்த அழகிய ரோஜா பூ என்றால் அது மிகையில்லை .
2 மனிதனுக்கு அதிக தொந்தரவு தரும் சீதபேதி எனும்  கொடிய நோயிக்கு விரைவான குணத்தை தரும் அருமருந்து, மேலும் நீண்ட நாட்களாக இருக்கும் சீதபேதி பேதி தொந்தரவுகளுக்கு , ரோஜா இதழுடன் சில கடை சரக்கை சேர்த்து சூரணம் செய்து சாப்பிட்டால் விரைவில் குணம் பெறலாம், ஆங்கில மருந்துகளால் வரும் பக்கவிளைவினை தவிர்க்கும் விதமாகவும், குணப்படும் தன்மையையும் தரும்.
3 சலதோஷத்தால் வரும் தும்மலையும் , ஒவ்வாமையால் வரும் தும்மலையும் , விரைவில் குணப்படுத்தும் தன்மை கொண்டது , மேலும் நுரையிரல்  சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல குணத்தை விரைந்து தரும், ஒரு தலைவலிக்கு நல்ல மருந்தாக பயன்படும் இதன் இதழும் இலையும் என்றால் அது மிகையில்லை.
4 வாந்தி மயக்கம் ஏற்ப்படும் பொழுது , ரோஜா இதழின் சாறுடன் இஞ்சி சாறு சேர்த்து  குடிக்கும் பொழுது பித்தத்தினால்  ஏற்படும்  உடல் உபாதைகள்  சரியாகும்.

வாழ்க நலமுடன் 
சித்தமருத்துவர் AK லோகநாதன் 
9865655324





   


Friday, 8 November 2013

கண் கழுவும் முறை



காலை   எழுந்தவுடன்  ஒரு அகலமான பாத்திரத்தில்   தூ ய்மையான   நீரை  எடுத்துக்கொள்ளவும். பிறகு கண்களை திறந்தபடி , வாயையும் திறந்து கொண்டு முகத்தை நன்கு  நீரில் மூழ்க வேண்டும். தொடர்ந்து 5நிமிடங்கள் வரை அவ்வாறு செய்ய வேண்டும்.

விளைவுகள் 
  1. கல்லீரல்,கணையம் குளிர்ச்சி  அடையும் .
  2. இரத்தத்தில்  சர்க்கரை அளவு குறையும்.
  3. கண் குறைபாடுகள்  நீங்கும்.
  4. தொடர்ந்து இ ந்த பயிற்சியை  செய்தால் சர்க்கரை நோயிலிருந்தும்,கண்பார்வை குறைபா ட்டிலிருந்தும்   விடுபடலாம். 
  5. கணையம் இன்சுலினை  சுரக்கச்செய்யும். 
வாழ்க வளமுடன் 
AK லோகநாதன் DAT, SMP 
9865655324

ஆவாரை ஓர் அருமையான மருந்து !




"ஆவாரை   பூத்திருக்க சாவாரைக்  கண்டதுண்டோ"  

ஆவாரை  என்ற  செடி ஆற்றங்கரை  ஓரங்களில் மஞ்சள் நிற வண்ணத்தில் பூத்திருக்கும்.
              
இதன்  இலை,பூ,காய் அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்தது, இதனை பறித்து வந்து இளம் வெய்யிலிலும், நிழலிலுமாக உலர்த்தி  வற்றல்  இட்டுக் கொள்வார்கள். அதை தேங்காய் எண்ணெயில் வறுத்து சாப்பிட ருசியாகவும் இருக்கும். அதே நேரத்தில் சர்வரோகங்களையும் குறிப்பாக  மேக சம்மந்தப் பட்ட  நோய்களையும் "ஆண்மை"  சம்பந்தபட்ட  நோய்களுக்கு அருமருந்து,  மேலும் நீரழிவு நோயினை விரைவில்   குணப்படுத்தும் தன்மை கொண்டது .


வாழ்க வளமுடன்  

AK லோகநாதன் DAT, SMP 
9865655324

Saturday, 2 November 2013

நோயின்றி வாழ பசித்த பின் புசி !!!!



"மருந்தென   வேண்டவாம்  யாக்கைக்கு அருந்தியது 
அற்றது  போற்றி உணின் "
     
எப்போது உண்ணலாம்? எப்படி உண்ணலாம்?
பசித்த பின்   புசிக்கவும் .

"நொருங்க திண்  றால் நூறு வயது "

நொருங்க தின்பது செரிமானத்தை  எளிதாக்கும்.நன்றாக மென்று அரைத்து கூழா க்கி    விழுங்க   வேண்டும். ஏனென்றால்   இரைப்பையில்  உணவை கூழாக்கவோ; அரைக்கவோ நொறுக்கவோ  முடியாது. இரைப்பைக்கு பற்கள் கிடையாது, அள வை   மீறிய உணவு  உடலிற்கு தேவையற்றதும், சீரான உறுப்புக்கு கஷ்டம் தருவதும் ஆகும் .

     "அளவுக்கு மீறினால்   அமிர்தமும்   நஞ்சு "
     
ஆ ங்கில   மருத்துவத்தினால்   தீர்க்க முடியாத   நோய்களின்  பட்டியல்:
*  நீ ரிழிவு நோய்
* ஆண்மைக்குறைவு 
* கர்ப்பப்பை  நோய்கள் 
* அதிக மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் 
* வாலிப சக்தியை மீட்க 
* மூலம் 
* சிறுநீரக கற்கள் ,பித்தப்பை  கற்கள் 
* ஆணுறுப்பு தளர்ச்சி ,வீரியமின்மை 
* இளநரை 
* திக்குவாய் 
* ஆஸ்துமா 
* அல்சர் 

    
நோயின்றி   வாழ    அணுகவும் :

நலம் அக்குபஞ்சர் மற்றும் சித்தமருத்துவம்.


டாக்டர்.ஏ .கே .லோகநாதன் ,
பவானி .09865655324

கழிவின் தேக்கம் - உயிரைப் போக்கும்



உலகில்   நம் ஏற்படுத்தி   கொண்டிருக்கும்  எல்லா   நோய்களுக்கும்   கழிவுகள்   மட்டுமே   காரணமாகும் .அதன் தன்மையும் அளவும்   தொந்தரவின்  வேகத்தை  தீர்மானிக்கிறது .அது தேங்கியிருக்கும்  இடம் பெயரையும் ,பாதிப்பையும்  முடிவு செய்கிறது .
       
எங்கெல்லாம் கழிவு    தேக்கம் உள்ளதோ  -அதை நீக்க முயல்கிறது.
இப்படி எதிர்ப்பு  சக்தி வலுவடையும் பொழுது, நுரையீரல் தானாக சளி கழிவை   வெளியேற்றுகிறது.
     
   சளி ,வாந்தி ,மலம்   மூ லமாக   கழிவுகள் வெளியேற்றப்பட வேண்டியவை, அவை உடலிலேயே தங்க நேரிட்டால், ஒவ்வொரு  உறுப்பையும் அதன்  இயக்கத்தையும்   பாதிக்கும்.
  
ரசாயன   மருந்துகளை கொண்டு   நோய்களை   அடக்குகிறோம்.
என்ன செய்கின்றன   இந்த மருந்துகள் ?

உடலில் எதிர்ப்பு சக்தி குறையும்  பொழுது  நச் சுகள்  அதிகரித்து கல்லீரலை பாதிக்கும்.


NALAM ACUPUNCTURE&SITHAMARUTHUVAM 
BHAVANI
9865655324

Wednesday, 16 October 2013

விநாயகர் துதி



             ஓரிருக்   கரங்கொண்டு   உனை   நான் வணங்க
             பேரருள்  உருக்கொண்டு  திருவாக  நீ   வருவாய்;
             தும்பிக்கை முகமொன்று  துணைநின்று   காக்க
             நம்பிக்கை தன்னாலே   என்   நெஞ்சில் கனிய
             கணநேரம் தப்பாது   எனக்கருள்  செய்ய
             கணப்பொழுதில் வரவேண்டும் கணபதியே நீ எனக்காய்.