'அனைவராலும் விரும்ப படும் மலர்களில் ஒன்றான ரோஜாபூ அழகும் மனமும் சேர்ந்தது மட்டுமல்ல , மருத்துவ குணம் நிறைந்ததும் கூட என்றால் அது மிகையில்லை.'
ரோஜா பூவின் மருத்துவ குணங்கள் :
1 மலசிக்கலுக்கு அறிய மருந்தாக ரோஜா இதழின் சாறு மற்றும் கஷாயம் பயன்படுகிறது, மேலும் வயிறு சம்பந்த பட்ட சில பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை தரும் அருமருந்து , முறைப்படி மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ரோஜா இதழின் சாறு மற்றும் கஷாயத்தை பயன்படுத்தினால், வயிறு சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும், நாம் உண்ணும் உணவின் சக்தியை உடலுக்கு முழுவதும் பரிபூரணமாக கிடைக்க செய்யும் தன்மை கொண்டது இந்த அழகிய ரோஜா பூ என்றால் அது மிகையில்லை .
2 மனிதனுக்கு அதிக தொந்தரவு தரும் சீதபேதி எனும் கொடிய நோயிக்கு விரைவான குணத்தை தரும் அருமருந்து, மேலும் நீண்ட நாட்களாக இருக்கும் சீதபேதி பேதி தொந்தரவுகளுக்கு , ரோஜா இதழுடன் சில கடை சரக்கை சேர்த்து சூரணம் செய்து சாப்பிட்டால் விரைவில் குணம் பெறலாம், ஆங்கில மருந்துகளால் வரும் பக்கவிளைவினை தவிர்க்கும் விதமாகவும், குணப்படும் தன்மையையும் தரும்.
3 சலதோஷத்தால் வரும் தும்மலையும் , ஒவ்வாமையால் வரும் தும்மலையும் , விரைவில் குணப்படுத்தும் தன்மை கொண்டது , மேலும் நுரையிரல் சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல குணத்தை விரைந்து தரும், ஒரு தலைவலிக்கு நல்ல மருந்தாக பயன்படும் இதன் இதழும் இலையும் என்றால் அது மிகையில்லை.
4 வாந்தி மயக்கம் ஏற்ப்படும் பொழுது , ரோஜா இதழின் சாறுடன் இஞ்சி சாறு சேர்த்து குடிக்கும் பொழுது பித்தத்தினால் ஏற்படும் உடல் உபாதைகள் சரியாகும்.
வாழ்க நலமுடன்
சித்தமருத்துவர் AK லோகநாதன்
9865655324
வாழ்க நலமுடன்
சித்தமருத்துவர் AK லோகநாதன்
9865655324
No comments:
Post a Comment