நோய் நாடி நோய் முதல்நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல்
Wednesday, 16 October 2013
விநாயகர் துதி
ஓரிருக் கரங்கொண்டு உனை நான் வணங்க
பேரருள் உருக்கொண்டு திருவாக நீ வருவாய்;
தும்பிக்கை முகமொன்று துணைநின்று காக்க
நம்பிக்கை தன்னாலே என் நெஞ்சில் கனிய
கணநேரம் தப்பாது எனக்கருள் செய்ய
கணப்பொழுதில் வரவேண்டும் கணபதியே நீ எனக்காய்.
No comments:
Post a Comment