நோய் நாடி நோய் முதல்நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்
ஓரிருக் கரங்கொண்டு உனை நான் வணங்க பேரருள் உருக்கொண்டு திருவாக நீ வருவாய்; தும்பிக்கை முகமொன்று துணைநின்று காக்க நம்பிக்கை தன்னாலே என் நெஞ்சில் கனிய கணநேரம் தப்பாது எனக்கருள் செய்ய கணப்பொழுதில் வரவேண்டும் கணபதியே நீ எனக்காய்.