Sunday, 22 December 2013

பனி வெடிப்புக்கு டிப்ஸ் வேண்டுமா?

                   பனி வெடிப்பு தைலம் 

தேங்காய் எண்ணெயில்  அருகம்புல்,வசம்பு ,விரலிமஞ்சள் இவைகளை 
போட்டு மிதமாக சூடுசெய்து  குளிப்பதற்கு முன் இந்த தைலத்தை ப்பூசி   அரைமணி நேரம்  கழித்து வெந்நீரில் குளித்துவந்தால் மேனிபளபளக்கும் 

                 பாதவெடிப்பு நீங்க சூரணம் 

பூந்திக்கொட்டை ,உப்பு,எலுமிச்சை ,படிகாரம்  இவைகளின் கலவையை சுமார் 10கிராம் அளவு எடுத்து 2லிட்டர் வெந்நீரில் கலந்து  அரைமணி நேரம் கால்களை  ஊறவைக்க வேண்டும்.

                  உடல்,முடி -முழுமையாகப்  பராமரித்தல்

 கறிவேப்பிலை,மருதாணி,கரிசலாங்கண்ணி,துளசி,வேம்பு,குப்பைமேனி,நெல்லிக்காய் இவைகளை பசைபோல் அரைத்து சிரசிலிருந்து பாதம்வரை தேய்த்து அரைமணிநேரம் கழித்து இளம் வெந்நீரில் குளிக்கவேண்டும்.

                 முகம் அழகு பெறுவதற்கு டிப்ஸ் 

உளுந்து,பாசிபைறு,கடுக்காய்,மஞ்சள் இவைகளை நன்கு அரைத்து சிறிது நீரில் கலந்து முகம்,கை,கால் இவற்றில் பூசி 30நிமிடம் கழித்து இளம்சூடான வெந்நீரில் கழுவ வேண்டும்.

                 முகப்பருக்கள் நீங்க டிப்ஸ்

.சோ ற்றுக்கற்றாலை,வேப்பிலை ,எலுமிச்சை சாறு ,ஆலிவ் ஆயிலில் கலந்து முகப்பரு உள்ள இடங்களில் தடவ வேண்டும்.முகப்பவுடரை தவிர்க்க வேண்டும்.